செய்திகள்
டிசம்பருக்கு முன்னர் தேர்தலொன்று நடக்கும் என்கின்றார் மகிந்த!
டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தலொன்று நடத்தப்படும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அபயராம விகாரையில் இன்று(27) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பும் போது, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஏதேனும் தேர்தல் டிசம்பருக்குள் நடக்கும். எந்தத் தேர்தலாக இருந்தாலும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.
-(3)




