செய்திகள்

கோட்டாபயவின் வீட்டுக்கு அருகில் பதற்றம்!

மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் இன்று நடந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம்முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு பதற்றநிலை ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், முன்னணி செயற்பாட்டாளர்களான அனுருத்த பண்டார, டனிஸ் அலி மற்றும் சுதார ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-(3)