செய்திகள்

சமையல் எரிவாயு விலை 1000 ரூபா குறைகிறது!

சமையல் எரிவாயு விலையை 1000 ரூபாவினால் குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை குறைந்தமை மற்றும் நாட்டில் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்து டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை ஆகிய காரணங்களினால் சந்தையில் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-(3)