செய்திகள்
தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்திக்கிறார் பிரதமர்!
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமரை சந்திக்க தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி கோரியிருந்த நிலையில், அதன்படி நாளைய தினத்தில் சந்திப்பு நடக்கவுள்ளது.
இதேவேளை நாளை மறுதினம் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளது.
-(3)




