அரசாங்கத்தில் இணைவோமா?: சஜித் அறிக்கை!
பிரதமர் பதவிகளுக்காக தமது கட்சியின் குழுவொன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி அரச சார்பு குழுக்களால் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதாக அவர் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் பலர் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும், பின்னர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் அறிக்கை மூலம் அவர் அதனை நிராகரித்துள்ளார்.
-(3)




