ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு நான்கு வருடங்கள் பூர்த்தி!
உலகத்தையே கவலையில் ஆழ்த்திய ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நான்கு வருடங்கள் கடந்துள்ளன.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் கத்தோலிக்க – கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டனர்.
500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து- நூற்றுக்கணக்கானோர் அவையங்களை இழந்து அங்கவீனர்களாக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் நீதி கோரி தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் நேற்று இரவு முதல் கொழும்பு கொச்சிக்கடையில் இருந்து கட்டுவாப்பிட்டி நோக்கி நடைபயண பேரணியொன்று கிறித்தவர்களினால் நடத்தப்பட்டது.
-(3)




