செய்திகள்
கொழும்பின் பல பகுதிகளில் திடீர் மின் தடை!
கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலன்னாவ துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 மற்றும் சில பகுதிகளில் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துண்டிப்பு இடம்பெற்ற பிரதேசங்களில் மின் இணைப்பை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
-(3)




