கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் துப்பாக்கி சூடு: 9 பேர் காயம்
அங்கு வீதி அபிவிருத்தி தளத்தில் பணிபுரியும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துறைமுகத்துடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி தளத்திலிருந்து இரும்பு திருடச் சென்ற இருவரை விசாரனை செய்ய முற்பட்ட போது, அங்கு வந்த பிரதேச மக்களால் அமைதியின்மையின்மை ஏற்பட்டுள்ளது.
இதன்போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ப்ளூமெண்டல் பகுதியை சேர்ந்தவர்களே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 4 பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்களில் ஒரு பெண் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
-(3)




