செய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புயல் அதிதீவிரமாக வலுப்பெறும்

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. “புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுவடைந்தது. மோக்கா என பெயரிடப்பட்டுள்ள புயல் வங்காளதேசம், மியன்மார் அருகே நிலை கொண்டுள்ளது. மே 14-ம் தேதி வங்காள தேசம் – வடக்கு மியான்மர் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட அகலாங்குகள் 03N இற்கும் 20N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 85E இற்கும் 100E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் கடற்தொழிலாளர் சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

இதேவேளை வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.இதையடுத்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவானது. இந்த புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு அதிதீவிர புயலாக வலுப்பெற்று வரும் ஞாயிற்றுக்கிழமை (14.05.2023) மியான்மர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.(15)