யாழ்ப்பாணத்தில் சிறுவர்களை கடத்த முயன்றார் என பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தகவல்
யாழ்ப்பாணத்தில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர் காணாமல் போனமை தொடர்பாக ஏற்கனவே அவரது குடும்பத்தினரால் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ். நாவாந்துறை பகுதியில் சிறுவர் ஒருவரை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)




