செய்திகள்
தென் கடற்பரப்பில் பெருமளவிலான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 பேர் கைது
தென் கடற்பரப்பில் பெருமளவிலான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.அத்துடன் போதைப்பொருள் ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளனர்
புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து நடத்திய விசேட நடவடிக்கையின் போது பலநாள் மீன்பிடி கப்பலுடன் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.(15)




