செய்திகள்

கொழும்பு – பொரளையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு – சீர்குலைக்கும் வகையில் ஒரு குழுவினர் முயற்சி

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 14 வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை கொழும்பு பொரளைப் பகுதியில் காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.குறித்த நிகழ்வு அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு குழுவினர் பதாதைகளை ஏந்தியவாறு நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை குழப்பும் முகமாக செயற்பட்டனர்.இதன் போது ‘புலிகளின் நினைவேந்தல் வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

இதனை அடுத்து அங்கு கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.அருட்தந்தை சத்திவேல், பிரபல சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னலிகொட உள்ளிட்டக் குழுவினர் மிகவும் அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்தனர்.(15)