செய்திகள்

யாழ்ப்பாணம் சுழிபுரம் – கல்விளான் பகுதியில் 24 வயதான யுவதி கிணறு ஒன்றிலிருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாண பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சுழிபுரம் – கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்று இரவு சடலம் மீட்கப்பட்டுள்ளது.அந்தப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான இராசதுரை நிரோஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.

கிணற்றில் வீழ்ந்தவரை மீட்ட அயலவர்கள், சங்கானை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும், ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்.இதேவேளை குறித்த யுவதி அவரது வீட்டில் இருந்து 300 மீற்றர்கள் தொலைவில் உள்ள கிணறு ஒன்றில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.(15)