வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பரிசோதனை கராபிட்டி போதனா வைத்தியசாலையில் முன்னெடுப்பு
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பிரேத பரிசோதனை கராபிட்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.இவரின் உயிரிழப்பு கொலையா? அல்லது தமது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டாரா? என்பது தொடர்பில் இதுவரை உரிய தகவல்கள் வெளியாகாத நிலையில், அவரது மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்றது.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ பேராசிரியர் அசேல மெண்டிஸின் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ம் திகதி வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் தமது மகிழுந்தில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில், பொரளை மயானத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)




