செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும்

நாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.ஆகவே, பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.15)