பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கைக்கு வேண்டுகோள்!
ஐ.நா.வின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் வோல்க்கர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள பொறுப்புக்கூறல் தொடர்பான அம்சங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இருப்பினும், மனித உரிமை பேரவையுடன் தொடர்ந்து ஈடுபாட்டை பேணுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஐ.நாவின் அறிக்கையாளர்கள் பலர் கடந்த காலங்களில் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர்களின் பரிந்துரைகளை இலங்கை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-(3)




