60 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு
இன்று(26) முதல் அமுலாகும் வகையில் 60 வகையான மருந்துகளின் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி கடந்த 15 ஆம் திகதி வௌியிடப்பட்டது.
அதற்கமைய, இன்று(26) முதல் 60 வகையான மருந்துகளின் விலைகள் 16 வீதத்தினால் குறைவடையவுள்ளன.
டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்த காரணத்தினால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலைகளும் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 500 மில்லிகிராம் பரசிட்டமோலின்(Paracetamol) புதிய விலை 3 ரூபா 49 சதமாகும்.
10 மில்லிகிராம் இன்சுலினின் அதிகபட்ச சில்லறை விலை 2,270 ரூபாவாகும்.
-(3)




