நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா
வரலாற்று சிறப்புமிக்க பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பதின்னாங்காவது திருவிழா ஆகிய முத்தேர் இரதோற்சவம் இன்று (02) இடம் பெற்றது.
இவ் ஆலய மஹோற்சவ கொடியேற்றம் (19) அன்று ஆரம்பிக்கப்பட்டு பதினாறு தினங்கள் இடம் பெற்று ஜுலை 03 ஆம் திகதியன்று தீர்த்தோற்சவமும் ஜுலை 04 ஆம் திகதியன்று தெப்போற்சவமும் அன்று மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.
இதில் நயினாதீவு நாகபூசணி அம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட தெய்வங்கள் இரதோற்சவத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதில் பல பாகங்களில் வருகை தந்து பக்தர்களின் பக்தி பூர்வமாக அருள் கடாச்சத்தினை பெற்றுச் சென்றனர். மற்றும் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர்.
-(3)





