இலங்கை கடலுக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்களுக்கு விளக்க மறியல்!
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டு கைதான 15 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் நேற்று (09) அதிகாலை இரு படகுகளில் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களும் அவர்கள் பயணித்த இரு படகுகளும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது.
இதன்போது நீதிமன்றம் குறித்த உத்தரவையிட்டதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தது.
-(3)




