செய்திகள்
நல்லூர் ஆலயத்தில் பாப்பரசரின் பிரதிநிதி
பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு நல்லூர் கந்தனை தரிசித்தனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைக்காக பிரதிநிதி அதி விந்தனைக்குரிய கலாநிதி பிறாயன் ஊடக்வே மூன்று நாள் அப்போஸ்தலிக்க விஜயமாக யாழ்ப்பாண மறை மாவட்டத்துக்கு வருகை தந்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவர் இன்று நல்லூர் ஆலயத்திற்கு சென்று நல்லூர் கந்தனை தரிசித்துள்ளார்.
-(3)




