செய்திகள்

சர்வகட்சி மாநாட்டை பகிஷ்கரிக்க ஜேவிபி முடிவு!

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை கொழும்பில் நடைபெற உள்ள சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டோம் என்று கேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடும் வகையில் விசேட சர்வ கட்சி மாநாட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இதன்படி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்தும் கட்சிகளுக்கும் இன்று மாலை சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் தேசிய மக்கள் சக்தி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று அறிவித்துள்ளது.

-(3)