13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் இதுராகாரே தம்மரத்தன தேரர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்படவுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது. இந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் தமது எதிர்ப்புக்களை வெளியிட வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும் என அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-(3)




