செய்திகள்

”இலங்கை – இந்தியா இணைப்பு பாலம்  அமைக்க சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்”

இலங்கை – இந்தியாவை இணைக்கும் பாலம்  அமைக்கப்படுமாயின், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேண்டுமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

ராகம தேவத்த பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஒருகாலத்தில் இந்தியாவினால் இலங்கை சில விடயங்களை அவர்களின் கருத்துக்களின் அடிப்படையிலே செயற்படுத்துவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், இவை அனைத்தும் முட்டாள்தனமாக கதைகள் எனவும் கர்தினால் கூறியுள்ளார்.

இலங்கை எப்போதும் சுதந்திர நாடாகவே இருந்து வருகிறது எனவும், இலங்கை எந்தவொரு மாநிலத்திற்கும் அடிமையாக இருந்ததில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பொருளாதார ஒப்பந்தங்களை நாட்டின் ஆட்சியாளர்கள் கையாண்டபோதும், எந்தவொரு நபரையும் அடிமையாக மாற்றவில்லை எனவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பாலத்தினை அமைப்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய கர்தினால் நாட்டிற்காக மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுதந்திரம் பெற்ற நாம் தற்போது சுதந்திரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

-(3)