சிங்கப்பூரின் புதிய அதிபராக தர்மன் சண்முகரத்னம் தெரிவு
சிங்கப்பூரின் 9வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவரின் பாட்டனார் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்.
தர்மன் சண்முகரத்னம் தவிர, காக் சோங் (75), டான் கின் லியான்(75) ஆகிய இருவரும் அதிபர் தேர்தல் போட்டியிட்டனர். அவர்களை பின்னுக்கு தள்ளி 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்தினத்திற்கு பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 1959ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரை ஆண்டு வரும் மக்கள் செயல் கட்சியின் இமேஜ், ஊழல் புகார்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் லீ சியென் லூங் அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
-(3)




