செய்திகள்

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா

இந்தியாவின் விண்வெளி ஆய்வு வரலாற்றில் முதல்முறையாக இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

நிலா, செவ்வாய் ஆகியவற்றை ஆய்வு செய்து சாதனை படைக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், தற்போது சூரியனையும் ஆய்வு செய்யப் போகிறது.

விண்ணில் ஏவப்பட்டுள்ள ஆதித்யா-எல்1 இன்றிலிருந்து சுமார் 4 மாதங்கள் பயணித்து எல்1-ஐ அடைந்து அங்கு நிலைகொள்ளும்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள இந்த எல்1 புள்ளி பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தொலைவு பூமிக்கும் நிலாவுக்கும் இடையிலான தொலைவைவிட நான்கு மடங்கு அதிகம்.

முதல்கட்டமாக, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி எக்ஸ்.எல் ராக்கெட்டில் ஆதித்யா விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட்டது. இரண்டாவதாக இந்த விண்கலம் பூமியின் குறைந்தபட்ச சுற்றுவட்டப்பாதையை அடையும்.

பிறகு சந்திரயான்-3 விண்கலம் பயணித்தது போலவே பூமியின் சுற்றுவட்டப் பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக பூமியிலிருந்து தொலைவாக நகர்ந்துகொண்டே போகும்.

-(3)