‘செனல் 4’ குற்றச்சாட்டை கோட்டாபய நிராகரித்தார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ‘செனல் 4’ அலைவரிசை வெளியிட்ட காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ளார்.
குறித்த காணொளியில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2005 இலிருந்து ராஜபக்ஷர்களின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ராஜபக்ஷர்களுக்கு எதிராக குறித்த ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய படங்களைப் போலவே இதுவும் பொய்கள் என கோட்டாபய ராஜபக்ஸ வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-(3)




