மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியது!
மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் 1,204 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 721 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மொராக்கோவில் நேற்று நள்ளிரவு 11.11 மணிக்கு ரிக்டர் 6.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 19 நிமிடங்களுக்கு பின்னர் 4.9 மெக்னிட்யூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பாரிய கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நள்ளிரவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக மொராக்கோவின் உள்விவகார அமைச்சு 296 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை 2000 ஐ கடந்துள்ளது.
2004 ஆம் ஆண்டு மொராக்கோவின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 628 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
-(3)




