செய்திகள்
காணாமல் போனோரின் உறவினர்கள் வெளிநாட்டு தூதுவர்களுடன் சந்திப்பு!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
காணாமல் போன தமது உறவுகளை தேடி தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருவதாகவும், தமக்கான நீதி கிடைக்க சர்வதேசம் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வெளிநாட்டு தூதுவர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதகரகங்களில் இந்த சந்திப்புகள் நடைபெற்றன.
-(3)




