செய்திகள்

”மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உண்டு”; நடா அல் நஷிப்

கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று ஆரம்பமானது.

இதன்போது உரையாற்றுகையிலேயே பிரதி ஆணையாளர் இதனை கூறியுள்ளார்.
அத்தோடு இலங்கையின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் பொறுப்புக்கூறல் அவசியம் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து முறையான விசாரணையையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

-(3)