செய்திகள்

ஜனாதிபதியினால் விசேட குழு நியமனம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் செனல் 4 ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஏ.சி.எம்.ஜெயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதியின் சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோசா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

-(3)