ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தொடர்பில் பொன்சேகா வெளியிட்ட கருத்து!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டு பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ என்றும் மற்றையவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனவும் முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது முன்னாள் இராணுவதளபதிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடையில் இடம்பெற்ற கடும் வாக்குவாதம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னாள் இராணுவதளபதியால் தனது இராணுவதலைமையகத்தை கூட பாதுகாக்க முடியவில்லை என மைத்திரிபாலசிறிசேன தெரிவித்ததை தொடர்ந்தே இந்த வாக்குவதம் இடம்பெற்றுள்ளது.
-(3)




