ஜனாதிபதி ரணில் ஜெர்மனி பயணம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜெர்மனிக்கு பயமாகியுள்ளார்.
செப்டெம்பர் 28 முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ‘பேர்லின் பூகோள உரையாடலின்’ முதல் நாள் அரச தலைவர்களின் கலந்துரையாடல் அமர்வில் ஆரம்ப உரையாற்றுவதற்காக அவர் ஜெர்மனிக்கு பயணமானதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதற்காக அரசியல், வர்த்தக மற்றும் சமூக ரீதியில் செல்வாக்கு மிக்கவர்கள் பங்கேற்கும் இந்த உச்சிமாநாட்டின் பின்னர் மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-(3)




