செய்திகள்

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

இன்று முற்பகல் பாராளுமன்றம் கூடிய போது அவர் இதனை முன்வைத்தார்.

நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கும் இலங்கையில் நிகழ்வு பற்றிய குறித்தசில கூற்றுக்களின் நிகழ்நிலைத் தொடர்பாடலை தடைசெய்வதற்கு ஏற்பாடு செய்வதற்கும், தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலைக் கணக்குகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத நிகழ்நிலைக் கணக்குகளின் பயன்பாட்டைத் தடுப்பதற்கும், இலங்கையில் தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நிகழ்நிலை அமைவிடங்களை அடையாளங்கண்டு வெளிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும், நிகழ்வுபற்றிய பொய்யான கூற்றுக்களின் தொடர்பாடலுக்கு நிதியளித்தல் மற்றும் வேறு ஆதரவை ஒடுக்குவதற்கும் அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலமாகும்.

-(3)