செய்திகள்

இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதல் தீவிரம்: இலட்சக் கணக்கானோர் வெளியேற்றம்!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடந்து வரும் போரில் இரு தரப்பிலும் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இரு தரப்புக்கும் இடையிலான மோதல்கள் மேலும் மோசமடைந்து வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் 600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பாலஸ்தீனத்தில் 413 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதல்களில் இஸ்ரேலில் தங்கியிருந்த 10 நேபாள மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களை குறிவைத்து வான் மற்றும் செல் தாக்குதல்களை இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ளன.

இதன் காரணமாக காசாவில் இருந்து சுமார் 123,538 பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது.

வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டவர்களில் பலர் கடலோரப் பகுதியில் உள்ள சுமார் 64 பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய தாக்குதல்களில் பல அடுக்கு மாடி குடியிருப்புகளும் அடங்குவதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மொத்தம் 159 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் 1,210 கட்டடங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-(3)