செய்திகள்
தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் குழு நியமனம்!
தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகளை வகுப்பதற்காக 9 பேர் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அந்த குழுவின் தலைவராக முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
-(3)




