சில மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த அறிவிப்பில் இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகேபொல, இம்புல்பே, பலாங்கொடை, ஓபநாயக்க மற்றும் கொலன்ன ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தின் பதுளை பகுதிக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை பிரதேசத்திற்கு முதல் நிலை எச்சரிக்கையும், தொலுவ மற்றும் பஸ்பாகே கோரளைக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேசத்திற்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-(3)




