செய்திகள்

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளியில் முன்னெடுக்கப்படவிருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வானது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அதனை ஏற்பாடு செய்திருந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபத் தலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (25) முன்னெடுக்கப்படவிருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வானது வெல்லாவெளி பொலிஸாரால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்நிகழ்வு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபத் தலைவர் என்.நகுலேஸ் மற்றும் மாவட்ட ஊடகப் பேச்சாளர் சாந்தன் ஆகியோரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவு

நிகழ்வானது ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் குறித்த இடத்துக்கு விரைச்த வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கட்சியின் உபத் தலைவர் என்.நகுலேஸை அழைத்து களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தினூடாகப் பெறப்பட்ட தடையுத்தரவினை வழங்கி நிகழ்வை உடன் நிறுத்துமாறு தெரிவித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 07ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-(3)