வலி வடக்கில் நடைபெற்ற மது பாவனை விழிப்புணர்வு கருத்தரங்கும்

பிரித்தானிய சைவத் திருக்கோயில் ஒன்றியத்தின் அனுசரணையில் 26/11/2023 அன்றைய தினம் மதியம் 2.00 மணியளவில் வலிவடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான மது பாவனை குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
சர்வோதய யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு.சி.யுகேந்திரா தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்விற்கு பிரித்தானிய சைவத் திருக்கோயில் ஒன்றியத்தலைவரும் லண்டன் வோர் கஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய அறங்காவலரும் ஆகிய திரு.மு.கோபாலகிருஷ்ணர் அவர்களும் தமிழரசு கட்சித் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ திரு. மாவை சேனாதிராஜா அவர்களும் வடமாகாண பிரதேச சபை உறுப்பினர் திரு. சுகிர்தன், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.சி.சுகிர்தாதேவி அவர்களும் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் மற்றும் குறித்த பிரதேச சமூக மட்ட அமைப்புக்களும் கலந்து கொண்டனர்.





