செய்திகள்

டெங்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 250-ஐ விட அதிகரிப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு  தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,000-ஐ தாண்டியுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் மாதத்தில் 7995 ஆக இருந்த நோயாளர்களின் எண்ணிக்கை இம்மாதம் முதல் 5 நாட்களில் 1534 ஆக அதிகரித்துள்ளது.

அதிகளவான நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், 47.1 வீதமான நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 12.5 வீதமான நோயாளிகள்  மத்திய மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

8.6% வடமேல் மாகாணத்திலும் 8.2% சப்ரகமுவ மாகாணத்திலும் பதிவாகியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக  நிலவிய மழையுடனான வானிலையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வருடத்தில் இன்று வரை  46 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

-(3)