”தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மலினப்படுத்தும் நடவடிக்கைகளில் புலம்பெயர் அமைப்புகள் ஈடுபடக்கூடாது”
ஒருசிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல்களுக்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மலினப்படுத்தும் நடவடிக்கைகளில் புலம்பெயர் அமைப்புகள் ஈடுபடக்கூடாது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசுவாமி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிநபர்கள் தமக்குள் பொறுப்பற்ற பிரகடனங்களை உருவாக்கி அவற்றை தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக முன்மொழிய முற்படுவது கண்டனத்திற்குரியது எனவும் சுரேன் குருசுவாமி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பை சேர்ந்த ஒருசிலர் பௌத்த பிக்குகளுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் இறுதி அரசியல் தீர்வு சமஷ்டி முறையான ஆட்சி என்ற மாறாத கொள்கையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் பயணிப்பதாக சுரேன் குருசுவாமி குறிப்பிட்டுள்ளார்.
-(3)




