வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுப்பு
வெளிநாடுகளிலுள்ள ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்ைககளை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் அனுமதி மறுஅறிவித்தல்வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதுதொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிவித்தல் விடுப்பதற்கு நடவடிக்ைக எடுக்கப்பட்டதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் இவ்வாறான ஆய்வு கப்பல்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக இலங்கை துறைமுகங்களில் அவற்றை நங்கூரமிட முடியுமென்றும் அதனை எவ்விதத்திலும் நிறுத்தமுடியாதெனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது..
அதற்கிணங்க சீனா எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி முதல் மே மாத இறுதிவரை தென்னிந்திய கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்ைககளை மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கை கடற்பரப்பில் அது நங்கூரமிடுவதற்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
சீயான் 6 சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் தமது ஆய்வு நடவடிக்ைககளை முடித்துக்ெகாண்டு கடந்த 2 ஆம் திகதி சிங்கப்பூரை நோக்கி பயணித்துள்ளது. அதனையடுத்து மேலுமொரு ஆய்வுக்கப்பலான சியென் யாங் ஹொங் -3 கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு ஆய்வு நடவடிக்ைககளில் ஈடுபடுவதற்கு சீனா இலங்கை அரசாங்கத்திடம் அனுமதிபெற்றிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் மேற்படி கப்பலுக்கு அனுமதி வழங்கவேண்டாமென இந்தியா இலங்கையிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-(3)




