செய்திகள்

பருத்தித்துறை முனை பகுதியில் தீ – இருவர் மரணம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில் மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான ஒருவரும் மற்றும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

-(3)