செய்திகள்

கிரிக்கெட் வீரர்களுக்கு பொலிஸ் திணைக்களத்தில் உயர் பதவிகள்!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய நான்கு வீரர்களுக்கு பொலிஸ் திணைக்கள உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா மற்றும் பொலிஸ் பரிசோதகர்களாக நுவான் பிரதீப் மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பொலிஸ் கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, இளம் சகலதுறை வீரர் அஷேன் பண்டாரயா, முன்னாள் பலம் வாய்ந்த வீரர்களான சாமர சில்வா மற்றும் நுவன் பிரதீப் ஆகியோருக்கு பொலிஸ் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வீரர்களுக்கான நியமனக் கடிதங்களை பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
-(3)