தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?: பேச்சில் இணக்கம் இல்லை – இரகசிய வாக்கெடுப்புக்கு முடிவு!
தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் தலைவரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் இன்று (11) மாதிவெலவிலுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
எனினும், இக்கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஜனநாயமுறையிலான இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-(3)




