ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இலங்கை கடற்படை சென்றமைக்கு மேற்கு ஆசிய நாடுகள் அதிருப்தி!
ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள செங்கடலில் அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள கடற்படைக் கப்பலை அனுப்பும் இலங்கையின் முடிவுக்கு மேற்கு ஆசிய நாடுகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
செங்கடலில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது யேமனில் இருந்து செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களை கட்டுப்படுத்த அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் தமது பாதுகாப்பு கப்பல்கள நிறுத்தியுள்ளன.
இந்நிலையில், செங்கடலின் பாதுகாப்புக்காக இலங்கையின் கடற்படை கப்பலை அனுப்பும் தீர்மானத்தை ஜனாதிபதி அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் கவலையடைந்துள்ள மேற்கு ஆசிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள், நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.




