இலங்கை புறப்படவிருந்த சாந்தன் காலமானாா்!
இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல் நலக்குறைவால் இன்றுகாலை காலமானார்.
இன்றிரவு இலங்கைக்குப் பயணமாக இருந்த நிலையிலேயே சாந்தனின் உயிா் பிரிந்திருக்கின்றது.
சாந்தன் இலங்கை வருவதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. அதன் பின்னா் சில ஆவணங்கள் தேவையாக இருந்ததால் அவரது பணயம் தாமதமாகியது.
இன்றிரவு புறப்பட தயாராக இருந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அவா் மரணமானாா்.
-(3)




