செய்திகள்

எரிபொருள் விலைகள் குறைப்பு!

நேற்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் திருத்தியுள்ளது.

அதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.

மேலும், சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.

அதேபோல், மண்ணெண்ணெயின் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 ரூபாவாகும்.

இதேவேளை, சிபெட்கோ விலை திருத்தத்திற்கு அமைவாக தமது எரிபொருட்களில் விலைகளிலும் திருத்தம் மேற்கொள்வதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.

-(3)