“அதிகார பரவலாக்கல் செய்யவேண்டும்”
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்விற்கும் இந்த நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைவதற்கும் பொலிஸ் அதிகாரத்துடனான அதிகார பரவலாக்கல் செய்யவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரவிக்கையில்,
அண்மையில் வெளிநாட்டு அமைச்சர் பாராளுமன்றத்தின் நிகழ்த்திய உரையினை வரவேற்பதுடன் அதனை ஜனாதிபதி உட்பட ஏனைய அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும் என தெரிவித்தார்.
அரசாங்கமும் ஜனாதிபதியும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும், 13 ஆவது சட்டத்தை கொண்டு வர வேண்டும், வடக்கு மற்றும் கிழக்கில் அமைதியை கொண்டு வர வேண்டும் என கூறுபவர்கள் மறைதமுகமாக தமிழர்களின் கலாச்சரத்தை ஒழிக்கும் செயற்பாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
-(3)




