செய்திகள்

”ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்”

பிரதான தேர்தல்கள் இரண்டையும் பிற்போடுவதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ ​தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனை கூறினார்.

தற்போதைய அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் அரசாங்கமா என்பதில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஸ வலியுறுத்தினார்.
-(3)