செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றில் இன்று (21) 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் 2 நாட்கள் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் போது செயற்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-(3)